தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரும் தேர்தல் கடமைகளில்
அத்துடன் தேவைப்பட்டால் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு வசதியான ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் செயற்பாடுகள் தற்போது அமைதியாக நடைபெறுவதால் தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
