தவறான செயலுக்கு இடையூறாக இருந்த மாணவியை தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட கதி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பாடசாலை மாணவியொருவரைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜண்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பதவி பறிபோகும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரம் பதவிய பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக திருமணத்துக்கு அப்பாலான உறவைக் கொண்டுள்ளார்.
அதற்கு குறித்த பெண்ணின் 17 வயது மகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.
பணி இடைநிறுத்தம்
சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய போது சந்தேக நபர் தங்கள் வீட்டில் தாயாருடன் தனித்து இருப்பதைக் கண்டு கடுமையாக திட்டி, வெளியில் போகுமாறு விரட்டியுள்ளார்.
அதன் காரணமாக கடும் கோபமுற்ற பொலிஸ் சார்ஜண்ட், மாணவியை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிஸ் சார்ஜண்ட்டுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவரை பணியில் இருந்து இடைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




