கொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நடிகையின் கணவன்
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய பிரபல நடிகை மகேஷி மதுஷங்காவின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
படுகாயமடைந்த பொரலஸ்கமுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
குடும்பத் தகராறு தொடர்பாக விசாரணைக்கான நேற்றிரவு சென்ற பொலிஸார் மீது சந்தேகநபரான கணவன் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர், சார்ஜன்டை கழுத்தை நெரிக்க முற்பட்ட போது, அங்கிருந்த 2 கான்ஸ்டபிள்கள் சார்ஜண்டை காப்பாற்ற முற்பட்ட போது, சந்தேக நபர் அவர்களையும் காலால் தாக்கியதில், கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
சந்தேகநபருக்கு விளக்கமறியல்
இதனையடுத்து குடிபோதையில் இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரான நடிகை மகேஷி மதுஷங்காவின் கணவனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.