பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துக் கொண்ட உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்
பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில், நடந்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(17.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தவறான முறையில் நடந்துக் கொண்ட அதிகாரி
கலேவெல அருகே, மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி தம்புள்ள கம்உதாவ மைதானத்தில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்வொன்றுக்கு கடமைக்கு சென்ற நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.

இதன்போது, அங்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண் உத்தியோகத்தரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
இதனையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர், தனது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் அப்பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
ஒரு பெண் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றது மற்றும் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை பணியிடை நீக்கம் செய்ய அப்பகுதிக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan