சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்
திருகோணமலை - கந்தளாய் பகுதியில் கலை நிகழ்வொன்றில் மோட்டார்சைக்கிள் சாகசம் காண்பிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சர்க்கஸ் கிணறு உடைந்து விழுந்ததில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (20.07.2023) இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் கலை நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதன்போது சர்க்கஸ் கிணறு உடைந்தமையால் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்ததையடுத்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கந்தளாய் லைட் வீதியில் வசித்துவரும் ஜானக சுரஞ்ஜீவ (45 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



