பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்கள் மீது தாக்குதல் (Video)
கிளிநொச்சி – பளை பிரதேசத்தில், இரவு நேர உணவகம் ஒன்றுக்குள் நுழைந்த குழு ஒன்று உணவகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவில் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தும் காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
கையில் தடியுடன், இந்த உணவகத்தின் காசாளர் உள்ளிட்டவர்கள் இதன்போது தாக்கப்படுகின்றமை சிசிரிவி பதிவுகள் ஊடாக வெளிப்பட்டுள்ள நிலையில், அந்த தாக்குதலானது, கடந்த நவம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக உறுதி செய்ய முடிந்தது.
முகக்கவசம் அணியாமல் இருந்தமையால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பில் ஆராய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசத்துடன் உணவகத்தில் உணவருந்த முடியாது எனவும், முகக்கவசம் அணியமையால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படுவதை நம்ப முடியாது எனவும் தாக்குதலின் பின்னனியில் வேறு காரணம் இருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
