பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்சம் பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தியட்சகரின் அனுமதி
வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வீட்டிலிருந்து பணிக்கு வர அனுமதிக்க, மட்டக்களப்பு பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதி பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.

அந்த அனுமதியை வழங்குவதற்கு கையடக்கத் தொலைபேசி உட்பட 72,000 ரூபாய் லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில், நுவரெலியா பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இலஞ்ச ஊழல் விசாரணை
அதற்கமைவாக நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் விசாரணைக்கு அமைவாக பல சந்தர்ப்பங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட், கடமை நேரத்தில் அலுவலகத்தினுள் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.