மதுபோதையில் இசை நிகழ்ச்சி மேடையில் ஏறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது-காலிமுகத்திடலில் சம்பவம்
கொழும்பு காலிமுகத்திடலிவ் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது மது போதையில் மேடையில் ஏறி, இசைககுழு மற்றும் பாடகர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பற்கள் மற்றும் உதட்டில் காயம்
மேடையில் ஏறி குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சியின் போது பொலிஸ உத்தியோகஸ்தரின் பற்கள் மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகஸ்தரின் உதடு வெடித்துள்ளதால், இரண்டு தையல்களை போட நேரிட்டுள்ளது என கோட்டை பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர் பொரலந்த பொலிஸ் பயிற்சி கல்லூரியில் கடமையாற்றி வந்த நிலை சிறப்பு பாதுகாப்பு பணிக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
பொலிஸ் உத்தியோகஸ்தர் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொலிஸ் உத்தியோகஸ்தர் நேற்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபபடுத்தப்பட்டுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
