தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர வழங்களுக்கு பொலிஸார் எதிர்ப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி வடக்கு - கிழக்கில் துண்டுப்பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், இன்று அம்பாறை - திருக்கோவில் பகுதியில் துண்டுபிரசூரம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக பொலிஸார் இடையூறு விளைவித்துள்ளனர்.
தேர்தலை புறக்கணிக்க கோருவது சட்டவிரோதம் எனவும், நல்லிணக்கத்தோடு உள்ள திருக்கோவில் பகுதியில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனம்
இதற்கு பதிலளித்த, கஜேந்திரன் எம். பி தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே தாம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதன்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொலிஸார் அவர்களை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட பகுதிக்கு அப்பால் செல்லும் வரை கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
