யாழ். முதல்வர் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள கருத்து! செய்திகளின் தொகுப்பு
யாழ். மாநகர காவல் படையினருக்கான சீருடையானது தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடத்திச் செல்லப்பட்ட காவற்படையினரது சீருடைக்கு ஒப்பானது என்பது தமது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் கைது தொடர்பில் தகவல் வெளியிடும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவின் ஆலோசனைப்படி விசேட விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கமைய யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலப் பதிவில், யாழ். மாநகர மேயரினால் இவர்கள் தற்காலிக சேவையாளர்களாக இணைத்து கொள்ளப்பட்டு சீருடை வழங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.
இந்த செயற்பாடானது தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்தை பகிரங்கப்படுத்துவதற்கு சமமாகும் எனவும், 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பிற்கமைய, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இது குற்றமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam