மன்னாரில் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸார்
யுக்திய சுற்றிவளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மன்னார் நகரப்பகுதியில் உள்ள வாகனங்களில் குறித்த அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்டு இன்றைய தினம் (20.03.2024) ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
யுக்திய சுற்றிவளைப்பு
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ஹேரத் 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயல் முறையில் கீழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யுக்திய சுற்றிவளைப்பின் போது வடக்கில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்கும் வகையில் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் நகரில் உள்ள முச்சக்கர வண்டிகள், அரச தனியார் பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்களில் தொலைபேசி இலக்கங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |