மேல்மாகாணத்தில் வாகனக் கொள்ளைகளை தடுக்க விசேட நவடிக்கை
மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மூச்சக்கர வாகனங்கள் கொள்ளையிடபப்டும் சமப்வங்கள் அதிகரித்துள்ளன.
இந்த குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மையில் சாலையோரங்களில் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இடம்பெற்ற தொடர்ச்சியான வாகனத் திருட்டுச் சம்பவங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணம் முழுவதும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் மட்டும் 13 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுளள்ன.
அதில் 10 மோட்டார் சைக்கிள்களும், 3 முச்சக்கர வாகனங்களும் களவாடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட வாகனங்களை கண்டறிந்து ஒழுங்கமைக்கப்பட்ட திருட்டுக் குழுக்களை அடையாளம் காண சிறப்பு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அதிபர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் இடம்பெற்ற வாகனத் திருட்டுகளுக்கும் சட்டவிரோத உதிரி பாகங்கள் விற்பனை வலையமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
அதிகாரிகள் பொதுமக்களிடம் பாதுகாப்பான வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்தவும், வாகனங்களில் திருட்டு தடுப்பு கருவிகளை பொருத்தவும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.