மாவீரர் தினத்தில் முகப்புத்தக பிரசாரம்: கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பொலிஸார்
வடக்கு - கிழக்கில் பெரும் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்துப் முகப்புத்தகத்தில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேகநபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேலும் கைதான ஏனைய இருவரில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனத் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முகப்புத்தக பதிவு
அத்தோடு, குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்ததாகக் கூறப்படும் முகப்புத்தக கணக்கிற்கு உரித்துடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூன்னறாவதாக கைது செய்யப்பட்டவரும், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவிப்பு முகப்புத்தக பதிவு காரணமாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
You My Like This Video
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        