பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பொலிஸார் : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டு
இலங்கை பொலிஸார், சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டி போன்றவர்களே பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (11.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் எங்களுடைய உறவுகளுக்காக தான் இந்த போராட்டங்களை செய்து வருகின்றோம். அதனால் பயங்கரவாத செயல்களில் நாங்கள் ஈடுபடுகின்றோம் என பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இங்கே பயங்கரவாத செயல்களை இலங்கை பொலிஸாரும், சி.ஐ.டி மற்றும்
ரி.ஐ.டி எனப்படுபவர்களே செய்கின்றார்கள்.
மேலும், இலங்கை அரசாங்கத்தினால் எதுவித தீர்வும் எட்டாத நிலையிலேயே நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |