யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்களிடம் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தபோது சிறுமிகள், தலைமை போதகரினால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தண்டனைக்குட்படுத்தப்பட்ட சிறுமிகள்
இதேவேளை தாம் தவறு இழைத்தால் பிளாஸ்ரிக் பைப் ஒன்றில் மண்ணை நிரப்பி அதனால் அடிப்பார்கள் என சிறுவர்கள் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாம் இல்லத்தில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் கல்வி கற்கும் பாடசாலை ஆசிரியர்கள் பலரிடம் முறையிட்ட போதும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது எமது இல்ல போதகரிடம் நாம் கூறியவற்றை கூறி விடுவார்கள்.
அதனால் நாம் ஆசிரியர்களிடம் முறையிட்டமைக்காக மீண்டும் இல்லத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோம் என தெரிவித்துள்ளனர்.
போதகர் தலைமறைவு
அதேவேளை சிறுவர் இல்லத்தில் இருந்த 80 வயதான தலைமை போதகர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கியத்துடன் , பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் (04.09.2023) திகதியன்று சம்பவத்துடன்
தொடர்புடைய போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதனை அடுத்து தலைமை போதகரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது அவர்
தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
