முள்ளியவளையில் மனித எச்சம் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் கைது!
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் நீண்டகாலத்தின் பின்னர் கொலை குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் நேற்று (20.01.2022) கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
குறித்த விசாரணை நடவடிக்கையின் போது உயிரிழந்த நபரின் மனைவி உட்பட உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரை கைதுசெய்துள்ளார்கள்.
பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri