முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் நிகழ்வு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
அவிசாவளை பகுதியில் போதைப்பொருள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை - குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் விருந்து நிகழ்வில் வைத்தே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வானது விடுதியின் உரிமையாளரால் முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருளும், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri