கொழும்பில் பிரபல ஆடைக்கடையில் ஏற்பட்ட மோதல்! வெளியான தகவல்
கொழும்பில் உள்ள பிரபல ஆடைக்கடை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று பதிவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பம்பலப்பிட்டி ஹவுஸ் ஆஃப் பேஷன் வளாகத்திற்குள் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் வர்த்தகர் சட்டத்தரணி ஊடாக பம்பலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
மேலும், இந்த வர்த்தகர் தாக்கியதாக ஹவுஸ் ஆஃப் பேஷன் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்திருந்தது.
வாடிக்கையாளரின் வாகனத்திற்கு முன்னால் மற்றுமொரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை முகவர் நிலையத்திற்கு அறிவித்த போதும் வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ள தாமதம் செய்ததன் காரணமாகவே வாடிக்கையாளர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக அவர்களின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்போது ஏற்பட்ட நிலைமையை தடுக்க ஊழியர்கள் தலையிட்டதாகவும் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan
