மட்டக்களப்பில் இரவோடு இரவாக தடையுத்தரவு வழங்கும் பொலிஸார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (04.02.2024) இலங்கையின் சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் தடை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு சிறு சமூக உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இவ்வாறான தடை உத்தரவுகளை இரவோடு இரவாக வீடுகளுக்கு சென்று பொலிஸார் வழங்கியுள்ளனர்.

தடை உத்தரவு
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வெபர் மைதானம் காந்தி பூங்காவில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மட்டக்களப்பு நீதவான நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரியினால் இது தொடர்பான அறிக்கை மன்றுக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri