குச்சவெளியில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு (Photos)
திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் இன்று (06) காலை பொதுமக்களினால் இனங்காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை உக்வத்தை விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கொலையா அல்லது இயற்கை மரணமா என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் குறித்த சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam