போக்குவரத்து பொலிசாரால் விதிக்கப்படும் அபராதங்கள்! ஒன்லைனில் செலுத்துவது தொடர்பில் செயலமர்வு
போக்குவரத்து பொலிசாரால் விதிக்கப்படும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பில் பொலிசாருக்கு செயலமர்வு போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸார் கலந்து கொண்டனர்.
செயலமர்வு
போக்குவரத்து சாரதிகளின செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபாரதங்களை அந்த இடத்திலேயே ஒன் லைன் மூலம் செலுத்தும் நடைமுறை நாடு பூராகவும் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதனடிப்படையில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இதனை நடைமுறைப்படுததும் வகையில் போக்குவரத்து பொலிஸாருக்கு தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.
இதில் வவுனியா- மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ன விஜயமுனி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri