வவுனியாவில் சந்தேகநபரை கண்டறிய பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்
வவுனியாவில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க காரணமான நபரை கண்டறிய வவுனியா பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்தி அவ்விடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்ற நபர் தொடர்பில் தகவலை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றால் அருகிலுள்ள பொலிஸ் நிலையம்
அல்லது 071-8591343, 024-2222226 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை
ஏற்படுத்தி வவுனியா போக்குவரத்து பொலிஸாருக்கு தகவலை வழங்குமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
