யாழில் மது போதையில் அட்டகாசம் புரிந்தவரை கைது செய்த பொலிஸார்
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன் வீதி பகுதியில், உள்ள வீடொன்றில் மதுபோதையில் இளைஞர், தாய் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார்.
அது தொடர்பில் அயலவர்கள் அவசர பொலிஸ் பிரிவு மற்றும் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன் போது, குறித்த இளைஞன் வீட்டிலிருந்த வாள் ஒன்றைத் தூக்கி பொலிஸார் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
அதனை அடுத்து பொலிஸார் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அத்துடன் இளைஞனிடம் இருந்து வாளையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனைக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
