பென்டகன் பாதுகாப்பு பகுதிக்குள் நுழைந்த கோழிக்கு காவல்
அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் பென்டகனில் நுழைந்த கோழியை பாதுகாப்பு ஊழியர் பிடித்து காவலில் அடைத்தனர்.
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்குவது பென்டகன். இங்கு எளிதாக யாரும் சென்று விட முடியாது. கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டிற்கும். இந்த நிலையில் சோர்வான கோழி என்று பென்டகனுக்குள் நுழைந்து பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்பட, பாதுகாப்பு ஊழியர்கள் அதை பிடித்து காவலில் அடைத்தனர்.
உள்ளூர் விலங்குகள் ஆர்வல அமைப்பு கூறுகையில் ‘‘பிடிப்பட்ட கோழி திங்கட்கிழமை காலை அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் தலைமையகம் அருகில் சுற்றித்திரிந்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் செல்சி ஜோன்ஸ், ‘‘கோழி சரியாக எந்த இடத்தில் காணப்பட்டது என்பது குறித்து கூற முடியாது. அதை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு செக்போஸ்ட் அருகே பிடிபட்டதாக மட்டுமே எங்களால் கூற முடியும்’’ என்றார்.
இதுகுறித்து ஜிம்மி பாலன் தன்னுடைய ‘The Tonight Show’, வேடிக்கையாக நீங்கள் சாதாரண கோழியா? அல்லது ரகசிய உளவாளியா? எனக் குறிப்பிட்டார்.
பின்னர், சிறு கோழி பண்ணை வைத்திருக்கும் ஒருவரிடம் கோழி ஒப்படைக்கப்பட்டது.
-மாலைமலர்-

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 19 மணி நேரம் முன்

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri
