பொலிஸாரால் கடத்தல் முயற்சி முறியடிப்பு
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு பின்பாகவுள்ள காட்டு பகுதியில் மரத்தடிகள் கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
உடையார்கட்டு காட்டுப்பகுதியில் நேற்று (09.04.2025) இரவு மரத்தடிகள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட நடவடிக்கையில் 1700இற்கு மேற்பட்ட காயா மரத்தடிகள் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri