சட்டவிரோத பொருட்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கான்ஸ்டபிளே போதை மாத்திரைகளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 56 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் களுத்துறை தெற்கு
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.