மோசடி செய்த பொலிஸ் அதிகாரி 10 நாட்களுக்கு பின் கைது..!
பெலியகொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், ரூ. 200,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(05.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
இலஞ்ச ஆணைக்குழுவின்படி, ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக பெலியகொட பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவால் ஏப்ரல் 19 அன்று கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர், மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவரை விடுவிப்பதற்காக ஒரு பொலிஸ் அதிகாரி இலஞ்சம் கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 24 அன்று நடத்தப்பட்ட ஒரு திடீர் சோதனையில், ஒரு பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்ற அதிகாரி நேற்று(04) காலை சுமார் 9.40 மணியளவில் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரை மே 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri