சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாயத்துறை அமைச்சா் மஹிந்த அளுத்கமகே, இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாட்டைச் செய்துள்ளாா்.
இந்தியாவில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட நனோ நைட்ரிஜன் பசளைத் தொடர்பில், சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடா்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நனோ நைட்ரிஜன் இறக்குமதி தொடா்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க சுமத்தியக் குற்றச்சாட்டு தொடா்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தாம் சாியான தகவல்களையே வெளியிட்டதாகவும் குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தாலும் அதற்கு உாிய பதில் தம்மிடம் இருப்பதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று நாடாளுமன்றத்தில் தொிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan