ஊடக அடக்குமுறைக்கு பொலிஸார் முயற்சி! கலாநிதி ரங்க கலன்சூரிய குற்றச்சாட்டு
இலங்கையில் ஊடக அடக்குமுறை கலாசாரமொன்றை ஏற்படுத்த பொலிஸார் முயற்சிப்பதாக இலங்கையின் ஊடகத்துறை ஜாம்பவான்களில் ஒருவரான கலாநிதி ரங்க கலன்சூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
தவறான மற்றும் ஆதாரபூர்வமற்ற செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்து இலங்கையின் மும்மொழி ஒளி மற்றும் ஒலிபரப்பு ஊடக வலையமைப்பொன்றுக்கு எதிராக இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவில் பொலிஸார் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவில் முறைப்பாடு
குறித்த செயற்பாடு ஊடக அடக்குமுறைக்கான முன்முயற்சிகளில் ஒன்றாகும் என்று தனது பேஸ்புக் பதிவொன்றின் மூலம் குற்றம் சாட்டியுள்ள கலாநிதி ரங்க கலன்சூரிய, ஊடக நிறுவனமொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடக அமைச்சில் தான் முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்குப் பதிலாக நேரடியாக தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவில் பொலிஸார் முறைப்பாடு செய்திருப்பதானது அவர்களின் உள்நோக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri