முள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெற்றோர்களின் கைகலப்பாக மாறியதால் ஏற்பட்ட விபரீதம்!
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் அப்பெண் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலில் குமரேசன் யோகேஸ்வரி என்ற பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் பிரச்சினை பெரியவர்களின் கைகலப்பாக மாறியுள்ளது. பாடசாலை பிள்ளைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு பெற்றோரை முரண்பட வைத்து தாக்குதலில் முடிந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண் கருத்து தெரிவிக்கையில்,
ஒரே குடும்பத்தினை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் எனது வீடு புகுந்து அடித்து கத்தியாலும் வெட்டியுள்ளார்கள். கதவினை உடைத்துள்ளார்கள். இதன் போது நான் கல்லால் தூக்கி எறிந்தேன் என்னை அடிக்க வந்த ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அதன் ஊடாக நான் மருத்துவமனை சென்றுள்ள நிலையில் வீட்டில் எனது கணவன் நான்கு பிள்ளைகளுடன் இருந்த வேளை இரவு நேரம் மண்வெட்டிபிடியால் கணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டினையும் சேதப்படுத்தியுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடிவாங்கிய எனது கணவனையே கைது செய்ய முயற்சித்துள்ளார்கள். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் முல்லைத்தீவு பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றோம் எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பொலிஸார்தான் பொறுப்பு என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்கள்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri