ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது
ஹெரோயின் உட்பட்ட போதைப்பொருட்களின் அதிகரித்த பாவனைக்கு பொலிஸ் உட்பட்ட படைத்தரப்பின் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒரு உதாரணமாக ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று(21) இரவு பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
குறித்த உத்தியோகத்தர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிநிலையைக் கொண்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டு உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதியாக செயற்பட்ட நிலையிலேயே போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
