நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
பருத்தித்துறை
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் - வாள்வெட்டு
சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தான நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலணை 3ஆம் வட்டார பகுதியில், மதுபானத்துடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
ஊர்காவற்துறை
இன்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னமடு பகுதியில், கஞ்சா பாவிப்பதற்கு முயன்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் இவ்வாறு ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனலைதீவு
காரைநகர் - மன்னார் அரச பேருந்தில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச்சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்தில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச் செல்லும் வேளை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.