சட்டவிரோதமாக நாடு திரும்பிய மூவர் பொலிஸாரால் கைது!
இந்திய கடற்றொழிலாளர்களின் படகின் மூலமாக மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். பருத்தித்துறையில் நேற்று (10.10.2023) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்திதுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது 1990 ஆம் ஆண்டு குடத்தனை வடக்கைச் சேர்ந்த தாயாரும் அவரது ஆண் பிள்ளையும், பெண்பிள்ளையும் தமிழகத்திற்கு சென்று சென்னையில் 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் வந்திறங்கி உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan