பொலிஸ் சுற்றிவளைப்பில் உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒருவர் கைது (Photos)
கற்பிட்டி, கப்பலடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 60 உரைகள் அடங்கிய1800 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேடப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவகுக்கமைய இன்று கற்பிட்டி பொலிஸாருடன் இனைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கப்பலடி கடற்கரைப் பகுதியில் லொறியொன்றிற்கு மஞ்சள் பொதிகளை ஏற்ற முற்பட்ட வேளை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மஞ்சள் பொதிகள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டுவரப்ப்டுள்ளதாக பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி வன்னி முந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றபட்ட மஞ்சள் பொதிகள் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் மஞ்சளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக லொறி கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.









