போதைப் பொருளுடன் இளைஞர் கைது
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்பே பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் ஹெரோயின் போதைப்பொருளை இளைஞரொருவர் வைத்திருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த இளைஞரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 4 கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரிடம் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலப்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



