பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கொள்ளுப்பிட்டியில் வைத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
தாக்குதல்கள் மற்றும் பொலிஸ் வாகனத்திற்கு சேதம் விளைவித்த முக்கிய நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் சரியான அடையாளத்தை கண்டறிய அவர்கள் தொடர்பான தகவல்களை கோருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உதவி கோரும் பொலிஸார்
அதற்கமைய, இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.'
மேலும் தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் 0718591735, 0718592735, 0718591733 ஆகிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மே மாதம் 10ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருந்தார்.
கொழும்பு - கங்காராம விஹாரைக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.