வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
வீதிகளில் தனிமையான நடந்து செல்லும் பெண்கள் அவதானமாக செல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் தங்க சங்கிலிகள் பறித்து சென்ற 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு, அவிசாவளை, திஸ்ஸமஹாராம, ராகம மற்றும் ஜாஎல ஆகிய பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் ஏதாவது ஒன்றை விசாரிப்பது போன்று நடித்து கழுத்தில் உள்ள தங்க சங்கிலிகளை பறித்து செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தங்க சங்கிலியை பறித்து செல்லும் சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பண்டிகை காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு பெண்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
