அரசாங்கத்திற்கு தொடரும் அழுத்தம் - பொது மக்களுடன் இணைந்த பொலிஸ்
நாடாளவிய ரீதியில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தினை வலுப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தினை தடுக்க வந்த பொலிஸ் அதிகாரி அதற்கு ஆதரவு வழங்கி பொது மக்களுடன் இணைந்துள்ளார்.
சீருடை அணிந்திருந்தாலும் நாங்களும் மக்களுடன் இருப்போம் என பொலிஸ் அதிகாரி ஒலிப்பெருக்கியில் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரியை மக்கள் ஆரவாரம் செய்து கைகளை தட்டி பாராட்டியுள்ளனர்.
அடுத்து வரும் ஆர்ப்பாட்டங்களில் முப்படையினரும் தம்முடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க Cineulagam
