கார் பயணத்திலும் ஹிஜாப் அவசியம் என பொலிஸார் அறிவுறுத்தல் - உலக செய்திகளின் தொகுப்பு
ஈரானில் கார்களில் பயணம் செய்யும் பெண்களும் ஹிஜாப் அணிவது அவசியம் என பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயது யுவதி பொலிஸ் காவலில் இருந்தபோது செப்டெம்பர் 16ஆம் திகதி உயிரிழந்தமைக்கு எதிராக ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கார்களில் பயணிக்கும்போது ஹிஜாப்பை அகற்றுவது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் புதிய கட்டடம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,