முழுமையாக நவீன சந்தை தொகுதியில் இயங்கும் பருத்தித்துறை மரக்கறி சந்தை
கடந்த இரண்டு வாரமாக நவீன சந்தை தொகுதியிலும் 24 பேரும், 5 பேர் புதிய சந்தை கட்டிட தொகுதியிலும் இயங்கிவந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை இரண்டு நாட்களாக பருத்தித்துறை நகரின் மத்தியிலுள்ள நவீன சந்தை தொகுதியில் முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய சந்தை தொகுதியில் மழை காரணமாக நீர்த்தேக்கம், மரக்கறி வியாபாரிகளுக்கு வியாபாரம் இன்மை, ஒருவழிப்பாதை, ஒடுக்கமான பாதை, போதிய தரிப்பிடமின்மை, உட்பட பல்வேறு காரணங்களால் மரக்கறி வியாபாரிகளில் 24. பேர் தாமாகவே முன்பிருந்த நவீன சந்தை தொகுதிக்கு மீண்டும் சென்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு
ஆனால் புதிய சந்தைக்குரிய குறித்த காணியை விற்பனை செய்திருந்தவரின் உறவினர்கள் ஐவர் உட்பட ஏழுபேர் புதிய சந்தை தொகுதியில் மரக்கறி வியாபாரம் செய்து வந்திருந்தனர்.

புதிய சந்தை தொகுதியிருந்து பழைய சந்தையான நவீன சந்தை தொகுதிக்கு சென்ற 24 மரக்கறி வியாபாரிகளையும் அழைத்து மீண்டும் புதிய சந்தை தொகுதிக்கு செல்லுமாறு பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலமையில் கூடிய நகர சபையின் 15 உறுப்பினர்களில் 8. உறுப்பினர்கள் கோரிக்கை விதித்திருந்த நிலையில் அவர்கள் தாம் உயிரை தாம் அங்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மறுநாள் தவிசாளரால் புதிய சந்தை தொகுதிக்கு பூட்டு போட்டு பூட்டப்பட்டு புதிய சந்தை தொகுதியில் எஞ்சியிருந்த ஏழு வியாபாரகளையும் நவீன சந்தைதொகுதிக்கு செல்லுமாறு தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர்கள் எழுபேரும் நவீன சந்தை தொகுதிக்கு செல்ல மறுத்துள்ளனர். இந்நிலையில் நகரபிதாவிற்கு எதிராக அதே பருத்தித்துறை நகரசபையின் செயலாளரால் வியாபாரிகளை கட்டாயப்படுத்துவதாக கூறி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பருத்தித்துறை பொலிஸார் நகரபிதா மற்றும் செயலாளர் ஆகியோரை அழைத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் தம்மால் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாது என்றும் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அன்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் புதிய சந்தை மற்றும் பழைய சந்தை தொகுதி என்பனவற்றில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியிருந்த நிலையி்ல் குறித்த இரண்டு சந்தைகளிலும் வியாபாரம் இடம்பெற்றது.
இந்நிலையில் நகரசபை தவிசாளருக்கு எதிராக செயலாளரால் பருத்தித்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 17/11/2025. அன்று பருத்தித்துறை பொலிஸாரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவதற்கு
இதனடிப்படையில் நீதவான் நீதின்றில் பின்வருமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்நது. மக்களால் தேர்ந்தெடக்கப்பட்ட சபை இருக்கும்போது செயலாளர் இப்படியானதொரு முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் கூட செய்ய முடியாது என்றும், இவ்வாறு தீர்ப்பு ஏதும் இடம் பெறுமாக இருந்தால் அது முழு நாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சபை சொல்கின்ற அல்லது கட்டளையிடுகின்றவற்றை செயலாளர் செயற்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.

தவிசாளர் தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கு கௌரவ நீதிமன்றால் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் நகரபிதாவால் கால அவகாசம் வழங்கப்பட்டு பழைய சந்தை தொகுதிக்கு புதிய சந்தை வியாபாரிகளை செல்லுமாறு அறிவித்தல் வழக்கிய நிலையில் அனைத்து வியாபாரிகளும் ஒற்றுமையாக பழைய சந்தை தொகுதியில் மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த புதிய சந்தையை பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவதற்காக பருத்தித்துறை நகரசபையில் 31/07/2025 அன்று பெரும்பான்மை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இத் தீர்மானத்தை செயற்படுத்தவிடாது இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். செயலாளரும் சபை அனுமதியின்றி உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர் , வடக்கு ஆளுநர் , ஆகியோருக்கு புதிய சந்தையை நவீன சந்தை தொகுதிக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |