கவிஞர் அஹ்னாஃப் ஜசீமை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜசீமை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறை அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியசர்களான முர்து பெர்னாண்டோ, யசந்த கோடகொட மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் இந்த உத்தரவு பிறப்பித்தனர்.
26 அகவைக்கொண்ட கவிஞர் அஹ்னாப் ஜசீம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவின் மீது இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கவிஞர் அஹ்னாப் ஜசீம், நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என அவரின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இதன்போது தகவல் அளித்த மேலதிக மன்றாடியார் நாயகம், நெரின் புள்ளே சந்தேக நபர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அத்துடன் தடுப்புக்காவல் முடிவடைந்ததும் அவர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என கூறினார்.
இந்த அடிப்படை உரிமை மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த மனு செப்டம்பர் 8 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
அஹ்னாஃப் ஜசீமை தீவிரவாதத்தையும் வன்முறையையும் ஊக்குவித்ததாகவும், தனது இலக்கியப் பணியின் மூலம் முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam