மகிந்த தலைமையிலான கூட்டங்களை நிறுத்திய பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்து நடத்தி வந்த “சாம்பலில் இருந்து எழுவோம்” என்ற தலைப்பிலான கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்கள்

பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
களுத்துறை, நாவலப்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய மூன்று இடங்களில் அண்மையில் இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.
நிலவும் நிலைமையில் அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது

நிலவும் நிலைமையின் அடிப்படையில் அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமாக இருக்காது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் கட்சி தொடர்பில் ஆராய்ந்து, கட்சியை ஒருங்கிணைத்து, அதன் பின்னர் கூட்டங்களை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        