பொதுஜன பெரமுன அழிந்து வருகிறது-சுதந்திர மக்கள் காங்கிரஸ்
சேற்றில் சிக்கிய மனிதன் அதில் இருந்து எழுந்திருக்க முயற்சித்து மீண்டும் மீண்டும் சேற்றுக்குள் அமிழ்வது போன்ற செயலையே அரசாங்கம் தற்போது செய்து வருவதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவில் வரி விதிப்புகள்
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், மிகப் பெரியளவில் வரி அறவீடுகளை குறைத்தார். அதேபோல் தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் வரிளை விதித்து வருகிறது.
நான் உட்பட 13 பேர் முதலில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்து, எதிர்க்கட்சியில் இணைந்துக்கொண்டோம். அப்போது பொதுஜன பெரமுனவின் பலம் பெரிதாக குறைந்தது.
எணணி பார்த்திராத பலர் ஜனாதிபதியுடன் இணைய திட்டம்
இதே விதமாக 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுன மேலும் பிளவுப்பட்டுள்ளது என்பது மிகவும் தெளிவானது.
நாம் என்றும் எண்ணி பார்த்திராத பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதியுடன் இணைய திட்டமிட்டு வருகின்றனர். அவர்களின் பெயர்களை தற்போது வெளியிட விரும்பவில்லை.
மேலும் ஒரு அணி இன்னுமொரு தரப்புடன் இணைய தயாராகி வருகிறது. பொதுஜன பெரமுன தற்போது அழிந்து வருகிறது. இந்த நிலைமையானது அரசாங்கத்தின் இருப்புக்கும் பாதிப்பாக அமையலாம்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் புத்திசாலித்தனமாகவும் காரணங்களுக்கு அமையவும் தீர்மானங்களை எடுப்பதில்லை எனவும் குணபால ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
