உற்சாகத்தில் கோட்டாபய! பின்வாசல் வழியாக நுழையும் செனரத் - எச்சரிக்கும் ரணில்
ஜனாதிபதி மாளிகையில் உற்சாகம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம், ஜனாதிபதி மாளிகையில் தமது தற்காலிக அலுவலகத்தில் பணிபுரியும் உற்சாகமான மனநிலையில் இருந்ததாக வாராந்த செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருப்பதால், தமக்கு எதிரான கவனம் திசைமாறியுள்ளது என்று எண்ணமாக இது இருக்கலாம் என்று அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
கோட்டாபய பணிபுரியும் அலுவலகத்தில் அவருடைய தனிப்பட்ட பணியாளர்கள் மாத்திரமே செயற்படுகின்றனர்.
பின் வாசல் வழியாக நுழையும் செயலாளர்
ஜனாாதிபதியின் மாளிகையை ஆர்ப்பாட்டக்கார்கள் ஆக்கிரமித்துள்ளமையால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், பின்பக்க வாசலின் ஊடாகவே ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று வந்தார் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பொருளாதாரப் பேரழிவு தாம் எதிர்பார்த்ததை விட மிக மோசமானதாக இருக்கும் என்று பிரதமர் கூறியிருப்பதற்கான அர்த்தத்தை செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.
ரணிலின் கணிப்பு
இந்தநிலை ஜூலை பிற்பகுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த நெருக்கடி தீவிரமடையும் என்பதை கொண்டே ரணிலின் கருத்து வெளியாகியுள்ளதாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் எதிர்பார்த்த எரிபொருள் கையிருப்பு வந்து தீர்ந்துவிட்டால், விநியோகத்தை உறுதி செய்ய அரசாங்கத்தால் நிதி திரட்ட முடியுமா என்பதுதான் கேள்வி.
இது பேரழிவு நிலைமையை கொண்டு வரும். இதை மோசமாக்கினால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
கடனில் பெறப்பட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்கினாலும், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குப் பிறகே அறுவடையை எதிர்பார்க்க முடியும்.
எனவே, இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை நெல் விளைச்சல் இல்லை.
இதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி வரும். எனினும் அதற்கு அன்னியச் செலாவணி நாட்டில் இல்லை. இதனால், மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.
இதனையடுத்தே உதவிக்காக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பை இலங்கை அரசாங்கம் அணுகியுள்ளது