பிரதமருக்கான கேள்விக்கு பிரதமரே பதிலளிக்கவேண்டும்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி கோசம்
இலங்கையின் நாடாளுமன்றத்தில் பிரதமா் கேள்வி நேரத்தில், பிரதமருக்கு பதிலாக ஏனைய அமைச்சா்கள் பதிலளித்தமை தொடா்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.எம் மாிக்கார், 'யுகதனவி' மின்சார நிலையம் தொடா்பில், எழுப்பிய கேள்விக்கு, அவைத்தலைவர் தினேஸ் குணவா்த்தன பதில் வழங்க முற்பட்டபோதே இந்த இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
“யுகதனவி“ மின்சார நிலையம் தொடா்பில் அமெரிக்க நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடா்பில் பிரதமருக்கு முன்னதாகவே தொிந்திருந்ததா? என்ற கேள்வியும், அந்த நிறுவனத்துக்கு குறித்த மின்சாரநிலையம், கேள்விப்பத்திர முறையை மீறி வழங்கப்பட்டதாக கூறப்படுவது தொடா்பாகவும் மாிக்காா் கேள்வி எழுப்பினாா்.
இந்தக் கேள்விக்கு பிரதமா் பதில் வழங்காமல், தினேஸ் குணவர்த்தன பதில் வழங்க முற்பட்டபோது, தாம் கேட்ட கேள்விக்கு பிரதமரே பதில் வழங்கவேண்டும் என்று மாிக்காா் கோாினாா்.
எனினும் இதற்கு சாதகமாக ஜேவியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்கவும் கருத்துக்களை முன்வைத்தாா்.
இந்தநிலையில் பிரதமா் விரும்பினால், அமைச்சா்கள், அவருடைய கேள்விகளுக்கு பதில் வழங்கலாம் என்று சபாநாயகா் மஹிந்த யாப்பா அபேவா்த்தன தமது முடிவை இதன்போது அறிவித்தாா்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri