பிரதமரின் நல்லூருக்கான விஜயம் இரத்து: மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்றுள்ளதாக தகவல் (VIDEO)
பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார்.
நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய விஜயத்தை முன்னிட்டு ஆலயச் சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளும் மூடப்பட்டுக் காணப்பட்டன.
ஆலயத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, கோவில் வீதி என்பன பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டு மாற்றுப்பாதை ஊடாக பொதுமக்கள் அனுப்பப்பட்டனர்.
நல்லூர் கந்தன் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நல்லூருக்கான விஜயம் ரத்து செய்யப்பட்டதை அடுத்துப் பாதுகாப்பு
தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.



பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri