ட்ரம்பின் வரி விதிப்பு சர்ச்சை : புடினுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி
அமெரிக்கா இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு 50வீத வரி விதித்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கலந்துரையாடலின் போது, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்க
அத்தோடு, இந்த வருடத்தின் இறுதியில் ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
Timing is everything. As India-US ties bottom out, Modi chats with his good friend Putin, who will visit India later this year.https://t.co/w7c1W8ePh7
— Derek J. Grossman (@DerekJGrossman) August 8, 2025
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்க ஆவலாக உள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



