இந்துக்களின் முறைப்படி பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு மாகாண மாணவர்களை கெளரவிக்கும் வடமாகாண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி நெலும்பிய மண்டபத்தில் இன்றையதினம்(21.12.2025 ) இடம்பெற்றது.
கிளிநொச்சி விஜயம்
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டுள்ளார்.

குறித்த சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன , இராமலிங்கம் சந்திரசேகர், மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வள அமைச்சர், கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க நாடாபாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா,ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே உள்ளிட்டோர்கலந்து கொண்டுள்ளனர்.

06 பாடப் பிரிவுகளின் மாவட்டங்களில் 1-10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பூஜை வழிபாடுகள்
இதேவேளை, பிரதமர் ஹரிணி அமர சூரிய இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை ஆலயத்தில் இந்துக்களின் முறைப்படி பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

அத்துடன் ஆலயத்தின் வரலாற்று பற்றியும் கேட்டறிந்துள்ளார்.




அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam