தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்த ரணில்!
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை அனுப்பியமை தொடர்பிலேயே ரணில் விக்ரமசிங்க, தமது நன்றியை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு, இந்தியாவில் இருந்து பால் மா, அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகளை அனுப்பியமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் இலங்கையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் தாம் பாராட்டுவதாக, ரணில் விக்ரமசிங்க ட்வீட் செய்துள்ளார்.
கடந்த மே 18ஆம் திகதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இலங்கைக்கான உணவுப்பொருட்களை ஏற்றிய கப்பலை அனுப்பிவைத்திருந்தார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri