தீவகப் பெண்களின் நிலை வருத்தமளிக்கிறது: உதவுவதற்கு நான் தயார் - வடக்கு ஆளுநர்
யாழ். தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்குத் தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது.
இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திற்கு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாகப் பார்க்கிறேன்.
யாழ். மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்த நிலையில் அதிலும் பெண்களின் நிலை தொடர்பில் இவ்வாறான தகவல்கள் வெளிவருவது வருத்தமளிக்கிறது.
ஆகவே சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற தொழில்
துறையை ஏற்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் எனது
பொறுப்பை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan